வாஷிங்டன்,
நரம்பியல் நோய்க்கான மருந்தை உட்கொள்ளத் தவறியதால் ஏற்பட்ட திடீர் மருத்துவ அவசரநிலை காரணமாகவே அவர் இவ்வாறு கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதாக அவரது தரப்பு விளக்கமளித்துள்ளது. கோர்ட்டு அவருக்கு ரூ.19 லட்சம் (20,000 டாலர்) ஜாமீன் தொகை விதித்து வழக்கை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்தது.
ஹாலிவுட் திரையுலகில் 'ஹெல்பாய்', 'லீகலி பிளாண்ட்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை செல்மா பிளேயர் (வயது 54). சமீபகாலமாக மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காகப் போராடி வெள்ளை மாளிகை வரை சென்று பாராட்டுப் பெற்றார்.
இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் பறந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த செல்மா பிளேயர், நடுவானில் திடீரென ரகளையில் ஈடுபட்டார். தடுக்க வந்த 2 விமானப் பணிப்பெண்களைக் காயப்படுத்திய அவரை, போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
அங்கிருந்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற பெண்போலீஸ் அதிகாரியின் முகத்திலும் சரமாரியாக தாக்கினார். மேலும் சிகிச்சையின்போது அங்கிருந்த நர்சுகளையும் உதைத்து தள்ளினார். நரம்பியல் நோய்க்கான மருந்தை உட்கொள்ளத் தவறியதால் ஏற்பட்ட திடீர் மருத்துவ அவசரநிலை காரணமாகவே அவர் இவ்வாறு கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதாக அவரது தரப்பு விளக்கமளித்துள்ளது. கோர்ட்டு அவருக்கு ரூ.19 லட்சம் (20,000 டாலர்) ஜாமீன் தொகை விதித்து வழக்கை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்தது.