வாஷிங்டன்,
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அங்குள்ள துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டணத்தை உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை நேற்று முன் மொழிந்துள்ளது. அதாவது இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படித்து முடித்ததும் பயிற்சி வேலை (இன்டர்ன்ஷிப்) பெற புதிய கட்டண முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் (ஒ.பி.டி.) மாணவர்களை சேர்க்கும் கல்வி நிறுவனங்கள், ஒவ்வொரு புதிய மாணவருக் கும் அரசுக்கு 70 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.67.7 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும். புதுப்பிப்புக்கு 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.29 லட்சம்) செலுத்த வேண்டும். இதனால் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்த முன்மொழிவு குறித்து 60 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.