பாரீஸ்
பாரீசில் நடைபெற்று வரும் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது
சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு அளித்திருந்த 27 பரிந்துரைகளில் 14 அம்சங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டதாகவும், 11 அம்சங்கள் ஓரளவு நடைமுறைப்படுத்தியுள்ளது.
தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் குறித்து சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப் முடிவெடுக்க உள்ள நிலையில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட சாம்பல் பட்டியல் நீடிக்கும் என்றே தற்போதைய சூழ்நிலை உணர்த்துகிறது.
பாகிஸ்தான் அறிக்கையில் ஐ.நா.வின் கூற்றுப்படி, அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்ட இப்ராஹிம் தாவூத் பற்றி குறிப்பிடப்படவில்லை என்று மூத்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆசியா-பசிபிக் கூட்டுக் குழு கூட்டங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் தாவூத் பிரச்சினையை எழுப்பிய நிலையில், பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாத மற்றும் நிழல் உலக தாதா தாவூத் இருப்பதை தொடர்ந்து மறுத்து வருகிறது, மேலும் அவர் ஒரு பாகிஸ்தான் நாட்டவர் அல்ல என்று வலியுறுத்தி வருகிறது.