சான்டியாகோ
சிலியில் ஏற்பட்ட சேறு கலந்த வெள்ளப்பெருக்கில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. 6 பேர் காயம் அடைந்தனர்.
சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அது வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள்களை சூழ்ந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சேறு கலந்த நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதில், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. லாஸ் காண்டிஸ் பகுதியில் அவசரநிலையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான சம்பவங்களில் சிக்கி 6 பேர் காயம் அடைந்தனர். ஆற்றின் கரையோரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், சான்டியாகோ நகரில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. 10 மாவட்டங்களில் நிலச்சரிவுக்கான எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.