உலக செய்திகள்

70 நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் பயணிகளுக்கு வருகைக்கான விசா தற்காலிகமாக ரத்து - எதிகாத் விமான நிறுவனம் தகவல்

அபுதாபிக்கு வருகை புரியும் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, மாலத்தீவு, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட 70 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு வழங்குவதாக இருந்த ஆன் அரைவல் எனப்படும் வருகைக்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக எதிகாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அபுதாபி,

அபுதாபிக்கு வருகை புரியும் அபுதாபிக்கு வருகை புரியும் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, மாலத்தீவு, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட 70 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வருகைக்கான விசா வழங்கப்படும் என கடந்த வாரம் எதிகாத் விமான நிறுவனத்தின் தகவலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விசாவானது அபுதாபிக்கு வருகை புரிவோருக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இதில் ஒரு பயணி ஏற்கனவே அமீரகத்தில் வசித்து விசா ரத்து பெற்ற அல்லது சுற்றுலா விசா காலாவதியானவர்களும் விமான நிலையத்திற்கு வருகை புரியும்போது நேரடியாக குடியேற்ற பிரிவில் சென்று இந்த விசாவை உடனடியாக விண்ணபித்து பெறலாம்.

அதேபோல் அமெரிக்க விசிட் விசா வைத்துள்ள அல்லது கிரீன் கார்டு வைத்துள்ள அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளில் குடியிருப்பு விசா வைத்துள்ள இந்திய குடிமக்களுக்கும் அபுதாபியில் வருகைக்கான விசா வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.

தற்போது எதிகாத் விமான நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அங்கித் அகர்வால் என்ற இந்தியர் கேள்வி எழுப்பி இருந்தார். அதில் நானும் எனது குடும்பத்தினரும் இந்திய மக்கள். நாங்கள் அமெரிக்காவின் விசா வைத்துள்ளோம். இதில் அபுதாபிக்கு ஆன் அரைவல் விசாவில் வருகை புரிய முடியுமா? அல்லது குவாரண்டைன் இல்லாமல் துபாய்க்கு வரலாமா? தயவு செய்து வழிகாட்டவும் என கூறப்பட்டு இருந்தது.

அதற்கு எதிகாத் விமான நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், அமீரக அரசுத்துறைகள் தற்போது தற்காலிமாக வருக்கைக்கான விசா வசதியை ரத்து செய்துள்ளது.

இதில் கடந்த 14 நாட்களாக இந்தியாவில் இருந்தவர்கள் அல்லது இந்தியாவுக்கு வருகை புரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது. மேலும் இந்த வசதியை ரத்து செய்ததற்கான காரணத்தை அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை.

SCROLL FOR NEXT