உலக செய்திகள்

காசா: இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனியர்களில் 9 பேர் பலி

இதன்படி, நசர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது நடந்த தாக்குதலில், 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள் ஆவர்.

காசா நகர்

காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்களில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

காசா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், பாலஸ்தீனியர்களில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்பை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடந்தது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. இதன்படி, நசர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது நடந்த தாக்குதலில், 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள் ஆவர்.

இதேபோன்று, ஜெய்துன் பகுதி மக்கள் மீது நடந்த தாக்குதலில் 4 பேர் பலியாகி விட்டனர். மற்றொருவர் காயமடைந்து இருக்கிறார். இதனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.