உலக செய்திகள்

பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்திய பெண்மணி நியமனம்

பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்திய பெண்மணி கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

வாஷிங்டன்

ஐஎம்எப் எனப்படும் பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் கர்நாடகத்தின் மைசூரில் பிறந்தவர். இவர் ஐஎம்எப் எனப்படும் பன்னாட்டுப் பண நிதியத்தின் 11ஆவது தலைமைப் பொருளியல் வல்லுநராக ஜனவரி ஒன்று முதல் பொறுப்பேற்றுள்ளார். கீதா கோபிநாத் இந்தப் பதவிக்கு வந்துள்ள முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டுப் பண நிதியத்தின் உயர் பதவியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது அவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் என அதன் மேலாண் இயக்குநர் கிறிஸ்டின் தெரிவித்துள்ளார். கீதா கோபிநாத் தனித்தன்மைமிக்கவர் என்றும், உலகப் பெண்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகவும் கிறிஸ்டின் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT