காபுல்,
ஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நாட்டில் பல்வேறு தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல சுரங்கங்கள் சட்டவிரோதமாகவும் செயல்பட்டு வருகின்றன.
5 பேர் பலி
இந்நிலையில், அந்நாட்டின் தகார் மாகாணம் ஷா அப் மாகாணம் ஹா மஸ்ட பகுதியில் தங்கச்சுரங்கம் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில் இன்று 5 பேர் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 5 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.