சியோஸ்,
கிரீஸ் நாட்டின் கடலோர காவல் படையின் கப்பல் ஒன்று சியோஸ் தீவு அருகே ஏஜியன் கடலில் சென்று கொண்டிருந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அகதிகள் சிலரை ஏற்றி கொண்டு சென்ற படகு அதன் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவத்தில், 14 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். 11 குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 7 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி ஆகியோர் காயமடைந்தவர்களில் அடங்குவர்.
அவர்களில் 2 கடலோர காவல் படை அதிகாரிகளும் அடங்குவர். தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக ரோந்து படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும் மற்றும் நீச்சல் வீரர்களும் சென்றனர். இதில், பலியானவர்களில் 11 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர். சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் பலியானார். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.