ரோண்டா,
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தெற்கே ரோண்டா நகரில் லியோனார்டோ என பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த ஆண்டின் 7-வது புயலான இது பல மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழையை ஒரு சில மணிநேரத்தில் பொழிந்து விட்டு சென்றுள்ளது. இந்த புயல் போர்ச்சுகல்லையும் விட்டு வைக்கவில்லை.
போர்ச்சுகல்லில் கடந்த வாரம் 5 பேர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு இன்றி மக்கள் தவித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார்.
இதில், ஸ்பெயினின் ஆண்டலூசியா என்ற தெற்கு பகுதியின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் என பாதிக்கப்பட்ட 4 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு விட்டு வெளியேறி சென்றுள்ளனர்.
தொடர் மழையால் வயல்கள் வெள்ளம் சூழ்ந்தும், நீரில் மூழ்கியும் இருந்தன. கட்டிடங்கள், வீடுகள் மழை நீரால் சூழப்பட்டு இருந்தன. கார்கள், பைக்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நாயை காப்பாற்ற சென்ற பெண் ஒருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். எனினும், அவருடைய நாய் மீட்கப்பட்டது.