உலக செய்திகள்

கனமழை எச்சரிக்கை; பொதுமக்களுக்கு நேபாள பிரதமர் அறிவுறுத்தல்

நேபாளத்தில் கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி பனிப்பாறை உடைந்தும், நிலச்சரிவும் ஏற்பட்டதில் 1,300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

காத்மண்டு

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நேபாள பிரதமர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

நேபாளத்தில் இந்த வார இறுதியில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது. கனமழையை முன்னிட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களை பிரதமர் பாலேந்திர ஷா வலியுறுத்தி உள்ளார்.

கனமழை

அமெரிக்காவில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா புறப்பட்டு சென்றார். அப்போது அவர், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய கூடும்.

வெள்ளம், நிலச்சரிவும் ஏற்படலாம். இதனால், சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படலாம். கந்தகி மற்றும் லும்பினி போன்ற மாகாணங்களின் குறிப்பிட்ட ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்ய கூடும்.

எச்சரிக்கை

கோஷி, பாக்மதி, மாதேஷ், கர்னாலி மற்றும் சூடூர்பச்சிம் மாகாணங்களில் உள்ள மலை பிரதேசங்களிலும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால், 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

நேபாளத்தில் கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி பனிப்பாறை உடைந்தும், நிலச்சரிவும் ஏற்பட்டதில் 1,300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். அதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டின.

SCROLL FOR NEXT