உலக செய்திகள்

ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு; 30 பேர் பலி

பனிச்சரிவுக்கான சாத்தியமும் உள்ளது என மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

டோக்கியோ,

ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி கடந்த 2 வாரங்களில் 30 பேர் பலியாகி உள்ளனர். 290 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 300 செ.மீ. ஆழ பனியில் வீட்டுக்கு வெளியே 91 வயது மூதாட்டி ஒருவர் புதைந்து பலியாகி உள்ளார்.

இதனால், பிரதமர் சனே தகைச்சி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடும்படி படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

கட்டிட மேற்கூரைகளில் இருந்து பனி சேர்ந்து விழ கூடிய ஆபத்தும், பனிச்சரிவுக்கான சாத்தியமும் உள்ளது என மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

1986-ம் ஆண்டு 40 வருடங்களுக்கு முன்பு 181 செ.மீ. என்ற அளவில் பனிப்பொழிவு இருந்தது. அதனை முறியடிக்கும் வகையில், 183 செ.மீ. என்ற அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனா போல் ராகுல் காந்தி நடந்து கொள்கிறார்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலனில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யாது: பிரதமர் மோடி

டெல்லி: ஹோலி, தீபாவளியில் மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் அறிவிப்பு

16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை; ஸ்பெயின் திட்டம்

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்