உலக செய்திகள்

ஸ்பெயினில் அதிவேக ரெயில்கள் மோதல்: 46 பேர் பலி, பலர் படுகாயம்

179 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

ஸ்பெயின்: ஸ்பெயினில் 2 அதிவேக ரெயில்கள் மோதிய விபத்தில் 46 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள மாட்ரிட் - செவில்லே வழித்தடத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று காலை இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தைத் தொடர்ந்து, மாட்ரிட், சியுடாட் ரியல் மற்றும் அண்டலூசியா இடையிலான ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 179 பேர் படுகாயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT