உலக செய்திகள்

இந்தியா-சீனா பங்களிப்புடன் இமயமலை காலநிலை மாற்ற செயல்திட்டம் - நேபாள பிரதமர் பரிந்துரை

ஏரிகளை கண்காணிக்கவும், கூட்டு முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தவும் இந்த செயல்திட்டம் உதவும் என நேபாள பிரதமர் பேசினார்.

நியூயார்க்,

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, நேற்று முன்தினம் ஐ.நா. பொதுச்சபையில் பேசியபோது கூறியதாவது:-

இமயமலைப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுதல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியா, சீனா பங் கேற்புடன் நேபாளம் தலைமையில் 'இமயமலை காலநிலை மாற்ற செயல்திட்டத்தை' அமைக்க விரும்புகிறேன். செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்து வத்தை பகிர்ந்து கொள்ளவும், ஆபத்தான பனிப்பாறை ஏரிகளை கண்காணிக்கவும், கூட்டு முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தவும் இந்த செயல்திட்டம் உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, உலகளாவிய விநியோக அமைப்பில் உள்ள முரண்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார். 'போருக்கான ஆயுதங்கள் எல்லைகளை கடந்து வேகமாகச் செல்லும் நிலையில், விவசாயிகளுக்கு உரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடைகள் இருக்கின்றன' என்றார். ஆகஸ்டு 26-ந்தேதி நேபாள-திபெத் எல் லையில் ஏற்பட்ட பேரிடரில் இதுவரை 1,452 பேர் உயிரிழந்ததாகவும், 4,700 முதல் 6,000 பேர் வரை காணாமல் போனதாகவும் அவர் தனது உரையின் இடையே குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT