காபூல்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மிகவும் அதிகம். 87 சதவீதம் ஆப்கானிஸ்தான் பெண்கள் உடல் ரீதியான துன்பங்களுக்கோ அல்லது பாலியல் வன்முறைக்கோ ஆளாக்கப்படுகின்றனர், மனதளவிலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை அமைப்பு ஒன்று நடத்திய தேசிய கணக்கெடுப்பில் தெரியவந்தது.
கணவனோ அல்லது குடும்பத்தில் உள்ள வேறு ஆண்கள் கூட பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடுமைகளும் நடக்கின்றன.
காபூலில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சார்கா. படிப்பறிவு இல்லாதவர். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 28 வயதுடைய சார்காவை அவரது கணவர் தினமும் அடிப்பது வழக்கம் தான். ஒருநாள் சந்தேகத்தில் சார்காவின் கணவர் கத்தியை வைத்து சார்காவின் மூக்கை அறுத்துவிட்டார்.
சார்கா சிகிச்சைகாக காபூல் அழைத்து வர, உள்ளூர் அரசியல் தலைவர்கள் மிகவும் போராடி உள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து உள்ளது.
இதுகுறித்து சாகா கூறும் போது
''நான் என் கணவரிடம் சொல்லாமல், என் தாய் தந்தை வீட்டிற்கு சென்றது அவருக்கு அவமானமாகிவிட்டது. என்னை ஒரு தோட்டத்திற்கு அழைத்து சென்று, ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய் என கேட்டு அடித்தார். அவரிடம் துப்பாக்கியும் இருந்தது. ஆனால் அவரின் சட்டை பையில் ஒரு கத்தியை எடுத்து என் மூக்கை அறுத்தார். இரத்தம் வழிந்தது. ஆனால் அவர் என்னை அங்கேயே தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்'' என நடந்தவற்றை சார்கா கூறினார்.