GTA 6 வீடியோ கேம் 
உலக செய்திகள்

GTA 6 வீடியோ கேமில் வருவதுபோல் மனைவிக்கு பூ வாங்கிக்கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர்!

GTA 6 விளையாட்டின் முதன்மைக் கதாபாத்திரமான லூசியாவுக்காக விளையாட்டில் பூ வாங்கும் காட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் இவ்வாறு செய்துள்ளார்.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6 (GTA 6) வீடியோ கேம், இணையத்தில் ஒரு சுவாரசியமான மற்றும் நெகிழ்ச்சியான காரணத்திற்காக வைரலாகி வருகிறது. விளையாட்டில் உள்ள கதாபாத்திரத்திற்குப் பூ வாங்கிக் கொடுக்கும் கணவர்கள், நிஜ வாழ்க்கையிலும் தங்கள் மனைவிகளுக்கு பூ வாங்கித் தரும் புதிய போக்கு தொடங்கியுள்ளது.

நடந்தது என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த மன்ரோ கேமாக் என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கமான த்ரெட்ஸில் சுவாரசியமான அனுபவம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், தனது கணவர் GTA 6 விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இடையில் பூனைக்கு உணவு வாங்க கடைக்குச் சென்றவர், திரும்பி வரும்போது தனக்கு ஐஸ்கிரீமும் அழகான பூங்கொத்தும் வாங்கி வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பூ வாங்கியதற்கான சுவாரசிய காரணம்

திடீரென பூ வாங்கி வந்ததற்கான காரணத்தை மன்ரோ கேட்டபோது, "விளையாட்டில் லூசியாவுக்கு நான் பூ வாங்க வேண்டியிருந்தால், நிஜத்தில் உனக்கும் பூ வாங்க வேண்டும்" என்று அவரது கணவர் பதிலளித்துள்ளார். GTA 6 விளையாட்டின் முதன்மைக் கதாபாத்திரமான லூசியாவுக்காக விளையாட்டில் பூ வாங்கும் காட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் இவ்வாறு செய்துள்ளார்.

இணையத்தில் குவியும் பாராட்டுகள்

மன்ரோவின் இந்த பதிவு நேற்று (வியாழக்கிழமை) உலகளவில் வைரலானது. இதைப் பார்த்த பல பெண்களும், "என் கணவரும் GTA 6 விளையாடத் தொடங்கிய பிறகு எனக்கு பூ வாங்கித் தந்தார்" என தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். வழக்கமாக வீடியோ கேம்களால் கணவன்-மனைவி இடையே சண்டை வரும் நிலையில், "GTA 6 திருமணங்களைக் காப்பாற்றுகிறது" என நெட்டிசன்கள் நகைச்சுவையாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT