இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்க, இந்திய ராணுவம் மே 7-ந்தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.இதில் பாகிஸ்தானின் 8 முக்கிய விமானப்படை தளங்கள் சேதமடைந்ததாகவும், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் பலத்த அடியை சந்தித்தது.இந்தச் சம்பவத்தின் முதல் ஆண்டு நிறைவு நாளில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராக மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
“இந்தியா ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இனி பாகிஸ்தானுக்கு எதிராக ஏதாவது தவறான முயற்சி நடந்தால், அதன் பாதிப்புகள் ஒரு எல்லைக்குள் இருக்காது. அது மிகவும் பரந்த அளவிலும், ஆபத்தானதாகவும், அதே சமயம் வலியுள்ளதாகவும் இருக்கும்.கடந்த ஆண்டு நடந்த மோதல் உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போர். பாகிஸ்தானின் இறையாண்மையை யாராவது சோதிக்க நினைத்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆசிம் முனீரின் இந்த மிரட்டலுக்கு இந்திய ராணுவ தளபதிகள், “இது வேடிக்கையானது. பாகிஸ்தான் ராணுவம் போர்க்களத்தில் காட்டிய திறமையை விட, பொய்ப் பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்துகிறது” என்று பதிலடி கொடுத்துள்ளனர்.