பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, இம்மாநாட்டிற்கு மத்தியில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தனித்தனியே சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜி7 மாநாட்டிற்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் - இந்திய பிரதமர் மோடி சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது டொனால்டு டிரம்ப் பேசியதாவது, மோடி பிரதமராக இருக்கும்போது இந்தியாவை யாராவது தாக்கினால் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. பிரதமர் மோடி உடனான சந்திப்பு மிகவும் நல்ல விதத்தில் இருந்தது. இந்தியா - அமெரிக்கா இடையே நல்ல உறவு நிலவி வருகிறது. இரு நாடுகளும் இதற்குமேல் நெருக்கமாக இருக்க முடியாது. இதுதான் மிகவும் உச்சபட்ச நெருக்கம்.
இந்தியாவுக்கு புதிய பிரதமர் இருந்தால் அப்போதைய சூழ்நிலை குறித்து எனக்கு தெரியாது. ஆனால், இந்தியாவின் பிரதமராக மோடி இருக்கும்வரை அந்நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு (இந்தியாவுக்கு) துணையாக அமெரிக்கா இருக்கும்
என்றார்.