உலக செய்திகள்

இந்தியா-ரஷ்யா இடையேயான வலிமையான நட்பு 70 ஆண்டுகளாக நீடிக்கிறது பிரதமர் மோடி பேச்சு

இந்தியா-ரஷ்யா இடையேயான வலிமையான நட்பு கடந்த 70 ஆண்டுகளாக நீடிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

மாஸ்கோ,

ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு தனது பயணத்தின் 3-ம் கட்டமாக பிரதமர் மோடி ரஷியாவுக்கு சென்றார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் இந்தியா - ரஷ்யா இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பேரழிவு ஆயுதங்கள் பரவலாக்கப்படுவதை தடுக்க இந்தியாவும், ரஷ்யாவும் உறுதி கெண்டுள்ளன - இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணுஉலை அமைக்க இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா - ரஷியா இடையிலான நட்புறவு என்பது நம்பிக்கை அடிப்படையிலானது பாகிஸ்தான் உடனான நட்புறவு வளர்வதால் அதனை நீர்த்து போக செய்ய முடியாது என ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் கூறினார்.

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:

இந்தியா ரஷ்யா இடையேயான வலிமையான நட்பு 70 ஆண்டுகளாக நீடிக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தை இந்தியாவும் ரஷ்யாவும் ஏற்றுக்கொண்டுள்ளன. இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது பற்றி புதினுடன் அலோசனை நடத்தினேன். இருநாடுகள் இடையே சுற்றுலாவை மேம்படுத்த விசா விதிமுறைகள் தளர்த்தப்படும். இந்தியா ரஷ்யா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு புதிய திசையில் பயணிக்கிறது. இந்திரா 2017 பெயரில் முப்படைகளின் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படும். இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் பெயர் டெல்லியில் உள்ள சாலை ஒன்றுக்கு வைக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

SCROLL FOR NEXT