டோக்கியோ,
நான்காவது இந்தியா-ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் பேச்சுவார்த்தையில்(2+2) பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஜப்பான் சென்றுளார். நாளை நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி தோஷிமிட்சு மொட்டேகி, பாதுகாப்புத்துறை மந்திரி ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற ‘ரைசினா டோக்கியோ’ மாநாட்டில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது;-
“சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாப்பதில் இந்தியாவும், ஜப்பானும் உறுதியாக உள்ளன. இந்தியாவும், ஜப்பானும் தங்கள் தேசிய நலன்களை பாதுகாப்பதோடு, வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் நம்பகமான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்.
சர்வதேச சமூகம் கொரோனா பெருந்தொற்று, மத்திய கிழக்கு மோதல் மற்றும் உக்ரைன்-ரஷியா மோதல், வர்த்தக இடையூறுகள் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை ஆகியவற்றால் தொடர்ச்சியான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஒருபோதும் கடுமையான தடைகள் இருந்ததில்லை. அதற்கான வலுவான காரணங்களும் இருந்ததில்லை. அதுதான் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. பொருளாதார பாதுகாப்பை மேம்படுத்துவதே இன்று இரு நாடுகளுக்கும் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.