உலக செய்திகள்

பேரிடர் மேலாண்மை: இந்தியா - நேபாள ராணுவம் கூட்டுப் பயிற்சி

இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி யின் 19-ஆவது பதிப்பு கடந்த ஆண்டு உத்தர காண்ட் மாநிலம் பித்தோ ராகரில் நடைபெற்றது.

காத்மாண்டு.

பேரிடர்மேலாண்மை, வனப்பகுதி போர் முறை மற்றும் மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி நேபாளத்தின் ரூபந்தேஹி மாவட்டத்தில் நேற்று தொடங்கியது.

ரூபந்தேஹி மாவட் டம் சல்ஜாண்டியில் உள்ள நேபாள ராணுவப் போர்ப் பள்ளியில் அப்யாஸ் சூர்ய கிரண் கூட்டுப் பயிற்சியின் 20வது பதிப்பு தொடங்கியுள்ளதாக நேபாள ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் படைப்பிரிவு அளவிலான வீரர்கள் பங்கேற்கும் இந்தப் பயிற்சி, வரும் டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு நடைபெ றும் பயிற்சியில் இந்திய ராணுவத்தின் 12 குமாவோன் ரெஜிமென்ட் வீரர்களும், நேபாள ராணுவத்தின் ஜுவாலா தல் படைப்பிரிவு வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பயிற்சியின் போது பேரிடர் மேலாண்மை, வனப்பகுதி போர் முறை மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பான தத்துவார்த்த மற்றும் செயல் முறை அம்சங்களையும், சிறப்பு அனுபவங்களையும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பரிமாறிக் கொள்ள உள்ளனர்.

முன்னதாக, இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி யின் 19-ஆவது பதிப்பு கடந்த ஆண்டு உத்தர காண்ட் மாநிலம் பித்தோ ராகரில் நடைபெற்றது.

இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு ரீதியான ராணுவ -உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதுடன், வீரர்களின் தொழில்முறைத் திறன்களையும் புரி தலையும் மேம்படுத்தும் என்று நேபாள ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளிலும் சுழற்சி முறையில் ஆண் டுதோறும் நடத்தப்பட்டு வரும் சூர்ய கிரண் பயிற்சி, இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையிலான ஒருங்கி ணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT