உலக செய்திகள்

'ஐநா கௌரவப் பட்டியலில் இந்தியா': 2026-க்கான நிதிப்பங்கை முன்கூட்டியே செலுத்தி சாதனை!

ஐநாவின் 'கௌரவப் பட்டியலில்' இந்தியா இடம்பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2026-ஆம் ஆண்டிற்கான வழக்கமான பட்ஜெட் பங்கான 35.187 மில்லியன் டாலரை (சுமார் ₹294 கோடி) இந்தியா முன்கூட்டியே செலுத்தியுள்ளது. இதன் மூலம், உரிய காலத்தில் நிதி செலுத்தும் நாடுகளுக்கான ஐநாவின் 'கௌரவப் பட்டியலில்' (Honour Roll) இந்தியா இடம்பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா சபை கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் நிதி செலுத்திய 47 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும் இந்தியாவின் பங்களிப்பை ஐநா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் பாராட்டியுள்ளதோடு, இந்தியாவின் 'ஒற்றுமை சிலையைக்' (Statue of Unity) குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தி கூறியுள்ளார்.

அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது நிதிப் பங்கைச் செலுத்தத் தவறியுள்ள நிலையில், இந்தியா தனது கடமையைச் சரியாக நிறைவேற்றியுள்ளது. ஐநாவின் மொத்த பட்ஜெட்டில் 1.016% பங்கினை இந்தியா செலுத்தியுள்ளதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.