ஐ.நா. பொதுச்சபை 
உலக செய்திகள்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கியூபா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

193 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், 130 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 17 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 25 நாடுகள் பங்கேற்கவில்லை

நியூயார்க்,

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார, வர்த்தக, நிதி தடைகளை வாபஸ் பெறுமாறு அதில் கோரப்பட்டு இருந்தது.

அந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. 193 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், 130 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 17 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 25 நாடுகள் பங்கேற்கவில்லை.

இதனால் தீர்மானம் நிறைவேறியது. ஆதரவு தெரி வித்த நாடுகளில், இந்தியாவும் அடங்கும். இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் சவும்யா நாயர் தாக்கல் செய்த அறிக்கை வருமாறு:-

சர்வதேச சவால்களை பேச்சுவார்த்தை அல்லது தூதரக முயற்சிகள் மூலம்தான் தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே, கியூபா மீதான தடைகளை நீக்கி, அந்த நாட்டு மக்கள் தங்களது வளர்ச்சி கனவுகளை நனவாக்க வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT