Image Courtesy: PTI 
உலக செய்திகள்

இந்தியா-துர்க்மெனிஸ்தான் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் முன்னிலையில் இந்தியா-துர்க்மெனிஸ்தான் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அஷ்காபட்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கு சென்றார். தலைநகர் அஷ்காபட்டுக்கு சென்ற அவரை, துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோ வரவேற்றார்.

இதற்கிடைய நேற்று இரு நாடுகளுக்கு இடையே நிதி மற்றும் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் முன்னிலையில் 2 நாட்டு அதிகாரிகளுக்கிடையே கையெழுத்தாகியது. இந்த பயணத்தை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டுக்கு ஜனாதிபதி செல்கிறார்.

SCROLL FOR NEXT