உலக செய்திகள்

நேபாளத்தில் 102 கிலோ கஞ்சா கடத்திய இந்தியர் கைது

நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக நேபாள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காத்மாண்டு,

நேபாளத்தில் 102 கிலோ 638 கிராம் கஞ்சா கடத்திய இந்தியர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் வாகன சோதனை

நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக நேபாள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேபாளத்தின் பர்சா மாவட்ட எல்லையோரப் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

102 கிலோ 638 கிராம் கஞ்சா பறிமுதல்

அப்போது அந்த வழியே வேகமாக வந்த இந்தியப் பதிவு எண் கொண்ட காரை போலீசார் மடக்கி சோதித்தனர். அந்த காரின் ரகசிய பகுதியில் வைக்கப்பட்டிருந்த 102 கிலோ 638 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தியர் கைது

இதுதொடர்பாக, காரை ஓட்டி வந்த இந்தியாவின் குத்து வர்மா (வயது 32) என்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.