உலக செய்திகள்

ஐதராபாத்தில் உள்ள நோயாளிக்கு சீனாவில் இருந்து அறுவை சிகிச்சை செய்த இந்திய டாக்டர்

சிறுநீரக குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சை 90 நிமிடங்களில் இந்திய டாக்டர் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தார்.

பெய்ஜிங்,

ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து நுட்பமான அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் 3டி கேமராக்களுடன் ரோபோ கருவிகளை பயன்படுத்தி மருத்துவர்களும், செவிலியர்களும் காத்திருந்த நிலையில் சீனாவின் வுகானில் உள்ள டாங்ஜி மருத்துவமனையில் இருந்து நிகழ் நேர 3டி படங்களை பார்த்து ரொபோட் கைகள் உடன் இந்தியாவை சேர்ந்த சிறுநீரக நிபுணர் சையது முகமது காவுஸ் என்பவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து ரோபோட் உதவியுடன் ஐதராபாத்தில் உள்ள நோயாளிக்கு அவர் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள சீனா செய்தி தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ரோபோட் அமைப்புகள் மற்றும் அதிவேக 5ஜி (5G) இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோயாளிக்கு மாற்று  சிறுநீரக குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சை 90 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.