உலக செய்திகள்

சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்களை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா.

மொகாதிசு,

சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்களை இந்திய கடற்படையினர் அதிரடியாக மீட்டனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்திய பெருங்கடல் அமைந்துள்ள இந்நாட்டில் கடற்கொள்ளையர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய பெருங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை சிறைபிடித்து கடற்கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் தன்னாட்சி மாகாணமாக செயல்பட்டு வருகிறது. இந்த மாகாணத்தில் அதிக அளவில் கடற்கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர்.

20 மீனவர்கள் கடத்தல்

இதனிடையே, ஈரானை சேர்ந்த மீன்பிடி படகை கடந்த மாதம் சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்திச்சென்றனர். இந்த படகில் 20 பேர் மீனவர்கள் பயணம் செய்த நிலையில் அவர்களையும் கடற்கொள்ளையர்கள் கடத்திச்சென்றனர்.

மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை

இந்நிலையில், கடந்த மாதம் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்திய கடற்படையினர் இன்று அதிரடியாக மீட்டுள்ளனர். சோமாலியா அருகே இந்தியபொருங்கடல் பகுதியில் கடத்தப்பட்ட படகு இப்பதை அறிந்த கடற்படையினர் போர்க்கப்பல்களில் விரைந்து சென்றனர். பின்னர், விமானப்படையின் சி-17 ரக விமானம் மூலம் கடற்படை கமாண்டோக்கள் கடத்தப்பட்ட படகில் அதிரடியாக இறங்கினர்.

பின்னர், அந்த படகில் இருந்த மீனவகள் 20 பேரையும் பத்திரமாக மீட்டனர். 48 மணிநேரமாக நடந்த மீட்புப்பணி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஈரானை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT