தெஹ்ரான்,
மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹார்முஸ் நீரிணை கடல் வழி போக்குவரத்து கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியாவுக்கு முழு விலக்கு அளிப்பதாக ஈரான் நாடாளுமன்ற குழு அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அதிர வைத்துள்ள இந்த சலுகை, இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஈராக் மற்றும் கட்டார் ஆகிய 4 நாடுகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஈரானுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் எவ்வித தடையுமின்றி தாராளமாக இறக்குமதி செய்யப்படுவதை உறுதி செய்யவே ஈரான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய மற்றும் சீன கப்பல்களிடமிருந்து ஈரான் பயணக் கட்டணம் வசூலிக்கிறது. அதேநேரம் கத்தார் நாட்டு கப்பல்களுக்கு இந்த கட்டணத்திலிருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 30 சதவீதமும், எல்.பி.ஜி (LPG) இறக்குமதியில் 90 சதவீதமும் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு வரப்படுகிறது. தற்போது ஈரானின் இந்த உத்தரவால், போர் பதற்றத்திற்கு மத்தியிலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தடையின்றி கிடைப்பது தற்போதைக்கு உறுதியாகியுள்ளது. இது இந்திய அரசுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.