உலக செய்திகள்

அமெரிக்கா: சாலை விபத்தில் இந்திய மாணவி பலி

மினிவேனில் 7 பேர் பயணித்தனர்.

வாஷிங்டன்,

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் நவ்ய கடுசு (வயது 25). இவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் உயர்கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில், மாணவி நவ்ய கடுசு நேற்று தனது நண்பர்களுடன் இண்டியானா மாகாணத்தில் உள்ள லேக் கவுண்டி பகுதிக்கு மின்வேனில் சென்றார். மினிவேனில் 7 பேர் பயணித்தனர். கிரவுண்ட் பாண்ட் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் மினிவேன் மீது மோதியது. இந்த விபத்தில் மினிவேன் சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் மினிவேனில் பயணம் செய்த மாணவி நவ்ய கடுசு உள்பட 7 பேரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக 7 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மாணவி நவ்ய கடுசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் உயிரிழந்த நவ்ய கடுசுவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT