நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கோர்னெல் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ஆலாப் நரசிபுரா என்ற மாணவர் பயின்று வந்தார். பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் படித்து வந்த மாணவர் கடந்த 17 ஆம் தேதி திடீரென மாயமானார்.
பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மாயமான மாணவரை தேடும் பணியில் அங்குள்ள காவல்துறையும் இதாகா தீயனைப்பு துறையினரும் ஈடுபட்டனர். இதற்கிடையில் இதகா நீர்விழ்ச்சி அருகே நேற்று மாலை இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் மாயமான நரசிபுரா என்ற மாணவரின் உடல் அது என தெரியவந்தது. மாணவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.