வாஷிங்டன்,
இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது உலக வங்கி தனது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-27 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் பதற்றங்கள் அதிகரித்து வந்தபோதிலும், 2027-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சற்று வேகமாக, அதாவது 6.5 சதவீத அளவில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், '2025-ம் ஆண்டின் வலுவான பொருளாதார செயல்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் இந்திய பொருட்கள் மீதான கூடுதல் அமெரிக்க வரிகள் 50 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டதன் நேர்மறையான பங்களிப்புகள் காரணமாக 2027-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் என்று கணிக் கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.