உலக செய்திகள்

போரை நோக்கிய இந்தியாவின் முயற்சி பேரழிவை ஏற்படுத்தும்: பாகிஸ்தான் ராணுவம்

இந்திய ராணுவ முப்படை தளபதி கருத்துக்கு பாகிஸ்தான் விமர்சனம் செய்துள்ளது.

இஸ்லாமாபாத்,

டெல்லியில் ராணுவ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது நிகழ்ச்சியில் பங் கேற்ற அவரிடம், 'ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மீண்டும் சூழல் உருவானால், இந்திய ராணுவம் எப்படி எதிர்கொள்ளும்?' என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டினால், உலக வரைப்படத்தில் இருந்து பாகிஸ்தான் துடைத்து எறியப்படும்" என்று எச்சரித்தார். இதனை பாகிஸ்தான் ராணுவம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“இறையாண்மை கொண்ட அண்டை நாட்டை அச்சுறுத் துவது, அறிவாற்றல் இல்லாத நிலையை குறிக்கிறது. பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதனுடன் அமைதி யாக இணைந்து வாழ இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானை குறிவைக்கும் இந்தியாவின் யுக்தி ஏற்புடையதல்ல. போரை நோக்கிய இந்தியாவின் முயற்சி பேரழிவை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளது.