ஜகார்த்தா
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இந்தோனேசியாவும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது.
ஆன்லைன் ஆபாசப் படங்கள், இணையவழி மோசடிகள், சைபர் புல்லியிங் மற்றும் இணைய அடிமைத்தனத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்புத் துறை மந்திரி மியுட்டியா ஹபிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புதிய ஒழுங்குவிதிகளில் (Regulation) அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழியில் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின் கீழ், சிறுவர்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை (Accounts) வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தகுதியற்ற கணக்குகள் மார்ச் 28 முதல் முடக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த சட்டம் இந்தோனேசியா பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.