தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மோதலை குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொர்ந்து குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அமைதி பேச்சுவார்த்தையை ஈரான் நிறுத்தியுள்ளது.