உலக செய்திகள்

ஈரானில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 145 ஆக உயர்வு

ஈரானில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 145 ஆக உயர்வடைந்து உள்ளது.

தெஹ்ரான்,

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 80க்கும் கூடுதலான நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்து தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஈரானின் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.

ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 21 பேர் பலியாகி உள்ளனர். 1,076 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 145 ஆகவும், பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தேக அடிப்படையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் அறிவித்து உள்ளார்.