தெக்ரான்,
அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் இன்று 23-வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஈரானின் அணுசக்தி நிலையம் அருகே வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.
தலைநகர் தெக்ரானில் இருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள ஈரானின் முக்கிய செறிவூட்டல் தளமான நடான்ஸ் அணுசக்தி நிலையம் குறி வைக்கப்பட்டது. இதில் அந்த நிலைய வாளகத்தில் உள்ள கட்டமைப்புகள் சேதம் அடைந்தன.
இந்தநிலையில் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் அணு ஆராய்ச்சி மையம் அருகே இயங்கி வருகிறது. ஷிமோன் பெரெஸ் நெகேவ் என்ற அந்த அணு ஆராய்ச்சி மையம் இஸ்ரேலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
இதற்கிடையே அணுசக்தி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள டிமோனா நகரம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டன. ஈரான் ஏவிய ஏவுகணைகளை தடுக்க இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன.
ஆனால் ஏவுகணைகள் துல்லியமாக தாக்குதலை நடத்தின. அந்த ஏவுகணைகள் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே குடியிருப்பு பகுதிகளில் விழுந்து வெடித்தது. இதில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. அதேபோல் தெற்உ இஸ்ரேலின் மற்றொரு நகரமான அரத்திலும் ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பல வீடுகள் சேதம் அடைந்தன. டிமோனா மற்றும் அரத் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களால் இஸ்ரேலில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தநிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க 48 மணி நேரம் டிரம்ப் விடுத்துள்ள கெடுவை ஈரான் நிராகரித்து உள்ளது. ஹார்முஸ் தீவு அருகே அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை திறக்க 48 மணி நேரம் ட்ரம்ப் கெடு விதித்துள்ள நிலையில், அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்து ஈரான் வீடியோ வெளியிட்டுள்ளது.