உலக செய்திகள்

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைச் சமாளிக்கத் தயார் - ஈரான் அதிரடி

அடுத்த 3 மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

தெஹ்ரான்,

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 9 மாதங்களாக நீடித்து வரும் போர் மற்றும் ஈரான் துறைமுகங்கள் மீது அமெ ரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக, ஈரானில் பணவீக்கம் 88.7 சதவீதமாகவும், உணவுப் பொருட்களின் விலை 112.6 சதவீதமாகவும் உயர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் முற்றுகையைப் பற்றிக் கவலையில்லை என்று ஈரானின் முதல் துணை அதிபர் முக மது ரெசா ஆரிப் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தெற்குத் துறைமுகங்களுக்குப் பதிலாக மற்ற எல்லை வழி யாக சரக்குப் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு உள்ள தாகவும் அவர் கூறினார்.

மேலும், அடுத்த 3 மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என அதிபர் மசூத் பெசெஷ் கியான் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT