உலக செய்திகள்

ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும் - டிரம்ப்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தலைமை எங்களை அணுகலாம் என டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமைதி ஒப்பந்தத்தை ஏற்கும்படி அழுத்தம் கொடுக்கும் நோக்கில், அமெரிக்கா அனைத்து ஈரான் துறைமுகங்களையும் முற்றுகையிட்டு உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.

இந்தநிலையில், செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது:-

ஈரானின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்து சிதறக்கூடும். ஈரானில் எண்ணெய் குழாய்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் மூடப்பட்டால் அந்த குழாய் வெடித்து விடும்.

எண்ணெய் குழாய்களில் இருந்து கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ நிரப்ப முடியாது.

வெடித்து சிதறினால் அதனை முன்பிருந்ததைபோல மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.

இது மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும். போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தலைமை என்னை அணுகலாம். அவர்கள் பேச விரும்பினால் எங்களிடம் வரலாம், எங்களை அழைக்கலாம். உங்களுக்கு தெரியும், தொலைபேசி வசதி உள்ளது. எங்களிடம் நல்ல பாதுகாப்பான இணைப்பு வசதிகள் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.