உலக செய்திகள்

அயர்லாந்து: எதிர் திசையில் பாய்ந்த கார் 5 பேர் பலி; 4 பேர் காயம்

3 பெண்கள், ஆண் குழந்தை ஒன்று என 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் 30 வயதும், ஒருவர் 20 வயதும் உடையவர் ஆவர்.

கோ கில்டாரே

அயர்லாந்து நாட்டில், எதிர் திசையில் கார் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர்.

அயர்லாந்து நாட்டின் கோ கில்டாரே பகுதியில் எம்9 சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென பயண திசையில் இருந்து விலகி, எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

5 பேர் பலி

இதில், அந்த 2 வாகனங்களும் தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்து போய் விட்டன. இந்த சம்பவத்தில், ஒரு வாகனத்தில் பயணித்த ஆண்கள் 5 பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.

இதுபற்றி கர்டா பகுதிக்கான ஆணையாளர் ஜஸ்டின் கெல்லி கூறும்போது, விபத்தில் பலியான 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாஸ் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என்றார்.

4 பேர் காயம்

இதேபோன்று மற்றொரு வாகனத்தில் பயணித்த 3 பெண்கள், ஆண் குழந்தை ஒன்று என 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் 30 வயதும், ஒருவர் 20 வயதும் உடையவர் ஆவர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.