உலக செய்திகள்

பர்கினா பசோவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதல்; 47 பேர் பலி

பர்கினா பசோவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் குடிமகன்களில் 30 பேர் மற்றும் 14 வீரர்கள் உள்பட 47 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

சாஹேல்,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பசோவின் வடக்கே சாஹேல் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் குடிமகன்களில் 30 பேர் மற்றும் 14 வீரர்கள் உள்பட 47 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

அந்நாட்டில், அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மாலி மற்றும் நைஜர் ஆகிய அண்டை நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், இந்த ஆண்டில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.