உலக செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ ஜனவரி 14ல் இந்தியா பயணம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ இந்தியாவில் ஜனவரி 14 முதல் 4 நாள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.

தினத்தந்தி

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதன்யாஹூ அடுத்த ஆண்டு ஜனவரி 14ல் இந்தியாவிற்கு 4 நாள் சுற்று பயணம் மேற்கொள்கிறார். அவரை குஜராத்தின் அகமதாபாத் நகரில் பிரதமர் மோடி வரவேற்கிறார்.

குஜராத்தில் இதற்கு முன் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோரை மோடி வரவேற்றுள்ளார்.

ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் புதுடெல்லியில் நடைபெறும் அரசு சார்ந்த சந்திப்புகளில் பங்கேற்கிறார்.

இந்தியாவில் அவரது நிகழ்ச்சி பற்றிய விரிவான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும், உயர்மட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசுவார் என தகவல் தெரிவிக்கின்றது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது