உலக செய்திகள்

ஹிஸ்புல்லா அச்சுறுத்தல் இருக்கும் வரை லெபனானில் இஸ்ரேல் ராணுவமும் இருக்கும்: நெதன்யாகு

லெபனானில் நாம் இதனை செய்து வருகிறோம். கடந்த காலங்களில் காசாவிலும் இதனை செய்தோம் என கூறினார்.

டெல் அவிவ்

லெபனானில் ஹிஸ்புல்லா அச்சுறுத்தல் இருக்கும் வரை இஸ்ரேல் ராணுவமும் இருக்கும் என நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டல பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் வீரர்களிடம் கூறும்போது, லெபனானில் நீங்கள் மிக பெரிய வேலையை செய்திருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பு மண்டல பகுதிகளை உருவாக்கி உள்ளீர்கள் என்றார்.

ஹிஸ்புல்லா அச்சுறுத்தல்

அதுவும் நம்முடைய பகுதியில் அல்ல. அவர்களுடைய பகுதியில். லெபனானில் நாம் இதனை செய்து வருகிறோம். கடந்த காலங்களில் காசாவிலும் இதனை செய்தோம் என கூறினார். நம்முடைய எல்லை பகுதியில் பயங்கரவாத ராணுவம் இருப்பதற்கு நாம் அனுமதிப்பது இல்லை என்பதே இதற்கு அர்த்தம். அவர்களை நாம் வெளியேற்றி வருகிறோம். அதனையே நீங்கள் செய்து வருகிறீர்கள் என்றார்.

லெபனானில், ஆயுதங்களுடன் ஹிஸ்புல்லா அமைப்பின் அச்சுறுத்தல் நமக்கு இருக்கும் வரை இஸ்ரேல் ராணுவமும் இருக்கும். அந்த அச்சுறுத்தல் நீக்கப்படும் வரை நாம் தெற்கு லெபனானை விட்டு செல்லமாட்டோம் என்றும் நெதன்யாகு கூறினார்.