உலக செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சி அமைக்க தீவிரம்: எதிர்க்கட்சியுடன் ஐசென்கோட் கூட்டணி ஒப்பந்தம்

7 இடங்களை வென்ற வலது சாரி எதிர்க்கட்சி தலைவர் அவிக்டோர் லிபர்மேனை நேற்று சந்தித்துப் பேசினார்.

டெல் அவிவ்,

இஸ்ரேலில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமை யிலான கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்று பெரும்பான்மையை இழந்ததால், புதிய ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பான்மை கிடைக்காத நிலையில், 48 இடங்களை வென்ற கூட்டணியின் தலைவரும், 'யாஷர்' கட்சியின் தலைவருமான காடி ஐசென்கோட்டை ஆட்சி அமைக்குமாறு அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து, புதிய அரசு அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ள ஐசென்கோட், 7 இடங்களை வென்ற வலது சாரி எதிர்க்கட்சி தலைவர் அவிக்டோர் லிபர்மேனை நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய முதல் கூட்டணி ஒப்பந்தத்தில் இரு கட்சிகளும் கையெழுத்திட் டுள்ளன. அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஐசென்கோட், மற்ற கட்சிகளுடனும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT