வாஷிங்டன்,
துருக்கியில் கடந்த மாதம் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து ரகசியமாக வெளியேற்றப்பட்டார். ஈரான் விடுத்த மிரட்டல் காரணமாக, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் அவரை மற்றொரு விமானத்திற்கு மாற்றியதாக டிரம்ப் தெரிவித்தார். அவர் விமான நிலைய உணவு கொண்டு செல்லும் வாகனத்தில் மறைந்து சென்று வேறு விமானத்தில் ஏறினார்.
டிரம்ப் சென்ற ஏர் போர்ஸ் ஒன் விமானம் ஒரு போலியான இலக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த ரகசிய நடவடிக்கையை டிரம்ப் தற்போது ஒப்புக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் ரகசியமாக பயணிக்கும் முடிவு பாதுகாப்பு பிரிவின் முடிவே ஆகும்.
இருப்பினும் தனக்கு வரும் அச்சுறுத்தல்கள் பயத்தை ஏற்படுத்தவில்லை" என்றார். அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பயணங்கள் வழக்கமானவை என்றாலும், டிரம்ப்பின் இந்த ரகசிய நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாமல் ஈரான் அச்சுறுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது.