மாஸ்கோ,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாட்கள் பயணமாக ரஷியா சென்றுள்ளார். அவர் நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார்.
இந்நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உக்ரைன் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் அடுத்த மாதம் 12ம் தேதி இந்தியா வர உள்ளார். அந்த பயணம் தொடர்பாகவும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.