வாஷிங்டன்,
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதனிடையே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாக குறைத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ருபியோவை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தக ஒப்பந்தம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஜெய்சங்கரின் அமெரிக்க பயணத்தின்போது அரிய வகை கனிமங்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.