வாஷிங்டன்,
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு விதைப்பையில் புற்றுநோய்ப் பாதிப்பு ஏற் பட்டது. அவர் பதவியில் இருந்தபோதே இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.
அப்போது துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் அவருடைய பணிகளைக் கவனித்து வந்ததை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் டிரம்பிடம் தோல்வியை தழுவினார்.
ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, கடந்த மே மாதத்தில் தனக்கு தீவிரமான புற்றுநோய்ப் பாதிப்பு இருப்பதை பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கு நோய்ப் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதை அவருடைய மகன் ஹன் டர் பைடன் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து ஹன்டர் பைடன் அளித்த பேட்டியில் தந்தையின் இந்த நிலையை காண்பது தங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாகக் தெரிவித்தார்.