கரக்
ஜோர்டானில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
ஜோர்டான் நாட்டில் கரக் நகரில் ஹமவுத் கிராமத்தில் கிரேக்க பாரம்பரிய சர்ச் ஒன்றில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், சிறுவர்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். 34 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் உசைன்-2 வருத்தம் தெரிவித்ததுடன், அவர்களுடைய குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்து கொண்டார். சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னியும் வருத்தம் தெரிவித்து உள்ளார். ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரசும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பொதுமக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஏற்று கொள்ள முடியாதது என்றும் கூறினார்.