கோப்புப்படம் 
உலக செய்திகள்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்

பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகைக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக டிரம்புக்கு எதிராக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டை அவமதித்ததாக கூறி டிரம்ப் நேற்று கோர்ட்டில் ஆஜாபடுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவருக்கு 9 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.7.5 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் கோர்ட்டு உத்தரவை மீண்டும் மீறினால் சிறையில் அடைக்க நேரிடும் என டிரம்பை நீதிபதி எச்சரித்தார்.

SCROLL FOR NEXT