உலக செய்திகள்

கிம் ஜாங் அன் மரணம் என பரவிய வதந்தி; பொது வெளியில் தோன்றி முற்றுப்புள்ளி வைத்தார்

கிம்மின் உடல்நிலை குறித்து இதுபோன்ற வதந்திகள் பரவுவது முதல் முறையல்ல.

பியோங்யாங்,

வட கொரிய அதிபர் கிம் ஜான் அன் உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் மூளைச்சாவு அடைந்ததாகவும் இரு நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டன.

வடகொரியாவில் நீண்ட காலமாக கிம் குடும்பம் தான் ஆட்சியில் இருந்து வருகிறது. அவரது தாத்தா, தந்தைக்குப் பிறகு தற்போது ஆட்சியில் இருக்கிறார் கிம் ஜாங் அன். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களும் வதந்திகளும் பரவுவது வழக்கம்தான்.

பொதுவாக அவர் ஏதாவது நிகழ்ச்சிகளில் நீண்ட காலம் பங்கேற்காவிட்டால் அவர் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் எழுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது கிம் ஜான் உன்னுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் கோமாநிலைக்கு சென்று பின்னர் உயிரிழந்ததாக சில ஊடக தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்த நிலையில், கிம் தனது மகள் கிம் ஜூ ஏ மற்றும் மனைவி ரி சோல் ஜூ உடன் தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை நேற்று பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

கண்காட்சியில் பொருட்களை அவர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் உரையாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இந்த புகைப்படங்களை வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT